அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..

 
அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.. 


அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு   உச்சநீதிமன்றம் இடைக்கால தடை  விதித்து உத்தரவிட்டுள்ளது.  

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம்,   அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது.  

சொத்து குவிப்பு வழக்கு:  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆர் விடுதலையை  ரத்து செய்தது ஐகோர்ட்.. 
 
இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்வதாகக் கூறி , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.  கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில்,  அனைத்து தரப்பு வாங்களும் முடிவடைந்த பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 7ம் தேதி தீர்ப்பு வழங்கிய  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,   சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுவின் மனைவி  ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தார்.  மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு,  தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும்  உத்தரவிட்டார். 

உச்ச நீதி மன்றம்

இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர்  தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய மனைவி டி.மணிமேகலை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் உச்சநீதிமன்றத்திக் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது.  அப்போது சொத்துக்குவிப்பு வழக்கை கீழமை நீதிமன்றம் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.