திருக்குறளை அவமதிப்பதா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி!

 
kamal

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் குரூப் 4 குரூப் 2 குரூப் 1 ஆகிய தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள் என்னென்ன? அதன் மாதிரி வினாத்தாள்கள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. 

tnpsc3

அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளுக்கான குரூப் 2 ,குரூப் 2 ஏ தேர்வில் திருக்குறள் நீக்கப்பட்டிருந்தது.  2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதில் திருக்குறள் பயன்பாடு, மனித இனத்தில் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கம் ,சமூக பொருளாதார அரசியலில் திருக்குறளின் பங்கு ,திருக்குறளின் தத்துவம் என ஆறு தலைப்புகளில் திருக்குறள் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது . 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது.

TNPSC

ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டது . இதற்கு தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர் . இதைத் தொடர்ந்து மீண்டும் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எதிர்க்குரல் எழுந்தபிறகே டி.என்.பி.எஸ்.சி தேர்வு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட திருக்குறளானது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.  தமிழரைத் தலைநிமிரச் செய்த நூல்களுக்கு இதுபோன்ற அவமரியாதை இனிமேல் நடக்காமலிருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.