சட்டம், ஒழுங்கு சீர்கேடு - அமமுக சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்!

 
TTV STALIN

 தி.மு.க அரசின் சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ttv dhinakaran

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது, தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், இன்றைய ஆளும் தி.மு.க அரசு, அண்ணா அவர்களின் கொள்கைகளுக்கு மாறாக மக்கள் நலனை மறந்து ஒரு குடும்பத்திற்கு மட்டுமே நம்பிக்கையுள்ள அரசாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் வெடிகுண்டு கலாச்சாரம் என அன்றாடம் நடைபெறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் வானளவு உயர்ந்து, தி.மு.க.வின்
அவல ஆட்சிக்கு சான்றாக விளங்குகின்றன. ஆணவப் படுகொலைகள் தொடங்கி ஆளுங்கட்சி பிரமுகர்களின் அராஜகம் வரை மக்கள் விரும்பாத எண்ணற்ற நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ttv
 அமைச்சர்களால் அவமதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்.
 வேங்கைவயல் குடிநீர் தொட்டி சம்பவம்.

 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் பணிப்பெண் சித்ரவதை
மற்றும் பல்வேறு இடங்களில் பாதிக்கப்படும் பட்டியலின மக்கள்.
 மணல் கொள்ளை போன்ற அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்கும்
அரசு அதிகாரிகள் மீது தொடரும் தாக்குதல்கள்.
 சாதிக்கொடுமைகளால் நிகழும் படுகொலைகள்.
 காவல் நிலைய மரணங்கள்.
 பள்ளி மாணவர்களிடையே உருவெடுத்திருக்கும் சாதிய கலாச்சாரம் என இவை அனைத்தும் தமிழகத்தை உலுக்குகிறது.


புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாடு, இன்று குற்றச் சம்பவங்களால் நிறைந்துள்து. அரசு அதிகாரிகளே தங்களின் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வேண்டும் என கோரும் அளவிற்கு வன்முறைகள் நிறைந்த அலங்கோல மாநிலமாக காட்சியளிக்கிறது. விவசாயிகளுக்கு உரிய நீரை
பெற்றுத் தராததோடு தங்களின் நிலங்களை காக்க போராடும் விவசாயிகள் மீதும் குண்டர் சட்டத்தை பாய்ச்சி அவர்களை தி.மு.க அரசு வஞ்சிக்கிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட தி.மு.க அரசு தனது மாறாத ஊழல் குணத்தை கொண்டு, அரசு இயந்திரத்தின் அடிமட்டத்தில் தொடங்கி உயர்மட்டம் வரை அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து
கொண்டிருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. வெள்ள நிவாரணத்தில் தொடங்கி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வரை அரசின் திட்டங்களில் ஆளுங்கட்சியினர் தலையீடு பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளின் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பால் விலையில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் என்ற தி.மு.க அரசின் வாக்குறுதி காற்றில் பறக்கவிட்டுருப்பதோடு அவர்களை வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு தள்ளியிருக்கிறது.

ttv

சாலை மற்றும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, நில வழிகாட்டு மதிப்பீடு அதிகரிப்பு என மக்களின் மீது சுமைகளை ஏற்றுவதற்கான அத்தனை வழிகளையும் பயன்படுத்தி தி.மு.க அரசு மக்களை துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி அரசியல் நாகரீகமற்ற வகையில் வன்மத்தை வெளிப்படுத்தும் தி.மு.கவினரின் பேச்சையும், இதயதெய்வம் அம்மா அவர்களால் மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை முடக்கும் தி.மு.க அரசை கண்டித்தும், நய வஞ்சகமும், நரித்தனமும் நிறைந்த துரோகக் கூட்டத்தை மக்கள் முன்பாக தோலுரித்துக் காட்டும் வகையிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 11ஆம் தேதி முதல்" கீழ்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டங்களில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேருரையாற்றுகிறார்கள்.

நாள் இடம்
11.02.2024
ஞாயிற்றுக்கிழமை
மாலை 4 மணி

தஞ்சாவூர்

21.02.2024
புதன்கிழமை
மாலை 4 மணி

திருநெல்வேலி

22.02.2024
வியாழக்கிழமை
மாலை 4 மணி

சிவகங்கை

இப்பொதுக்கூட்டங்களில் தலைமைக்கழக நிர்வாகிகள், கழகஅமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும்நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மாநில, மாவட்டசார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், வட்ட / வார்டு / கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும்
பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.