திருப்பதியில் நாளை முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம்

 
திருப்பதி திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி கோவில்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி 30 ம் தேதி அதிகாலை வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு ஜனவரி 8 ம் தேதி நள்ளிரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வைகுண்ட வாயில் வழியாக அனுமதிக்கப்பட உள்ளது. இதற்காக 30 ம் தேதி முதல் 1 ம் தேதி மூன்று நாட்களுக்கு இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டு பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு 1.80 லட்சம் பக்தர்களுக்கு டோக்கன்  வழங்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். 

இந்தநிலையில் நாளை இரவுக்குள் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாமி தரிசனம் செய்து அனைத்து தரிசன வரிசைகளையும் காலி செய்யப்பட வேண்டும். எனவே திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுவது இன்று வழங்கப்பட்டு நிறுத்தப்படும். நாளை முதல் 7  ம் தேதி வரை டோக்கன் வழங்குவது இருக்காது. ஜனவரி 9 ம் தேதி  சாமி தரிசனத்திற்கான டோக்கன் 8 ம் தேதி முதல் வழக்கம்போல் வழங்கப்பட உள்ளது. ஜனவரி 2 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை இலவச தரிசனத்தில் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களை வரிசையில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வைத்து வைகுண்ட வாயில் வழியாக அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்