விழுப்புரத்தில் 36 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் 36 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் வன்னியர் இளைஞர் திருவிழா சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது. திருவிடந்தையில் உள்ள நித்திய கல்யாணி திருகோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் இம்மாநாடு நடைபெற உள்ளது. 12-வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் கலந்துக்கொள்வார்கள் என்பதால் 7 ஆயிரத்திற்க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் பாமக மாநாட்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் 36 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.


