ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு மாவட்ட எஸ்.பி அனுமதி
ஈரோட்டில் வருகிற 18-ஆம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு மாவட்ட எஸ்.பி அனுமதி வழங்கியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் 16ம் தேதி, பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தவெகவின் இந்த பரப்புரைக் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை 84 நிபந்தனை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து, கால அவகாசகம் தேவைப்படுவதால், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை டிச.18ம் தேதி நடத்துவதாக, அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச்செயலாளருமான செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். பின்னர், அந்த தேதியில் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த தவக.வினர் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.


