"இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நம் திராவிட மாடல் அரசு வீறுநடை போடுகிறது" - அமைச்சர் உதயநிதி

 
udhayanidhi udhayanidhi

#INDIA கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

udhayanidhi

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாநில சுயாட்சி - மொழி உரிமை - சமூக நீதியின் குரலாய் தெற்கில் தோன்றிய தி.மு.கழகம், முதன் முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் 1967-ல் ஆட்சி அமைத்த நாள் இன்று.



இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்தது என்ற  வரலாற்றை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அவர்களது தம்பிகளும் இதே நாளில் இருந்து தான் எழுத தொடங்கினார்கள்.

அந்த வரலாற்றின் நீட்சியாக, நம் கழகத் தலைவர் -  மாண்புமிகு முதலமைச்சர்  @mkstalin  அவர்கள் தலைமையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நம் திராவிட மாடல் அரசு வீறுநடை போடுகிறது.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காத்திடவும் - பாசிசத்தை வீழ்த்திடவும், #INDIA கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.