ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

 
railway employee

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Railway Employees New Rules: Bad news for railway employees, now railway  will deal strictly with these employees, announced this - informalnewz


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே  ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 


அதன்படி 11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.2,029 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. போனஸ் வழங்கபடுவதன் மூலம் 11,72,240 ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவர்.