தீபாவளி விடுமுறை- 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் பயணம்
தீபாவளி விடுமுறைக்காக சென்னையில் இருந்து மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறைக்காக சென்னையில் இருந்து மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1.33 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். அக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் 3.41 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 40 ஆயிரம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்துள்ளனர். சிக்னல் பிரச்சனை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து மொத்தம் 4059 பேருந்துகள் இயக்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக இயங்கும் 2092 பேருந்துகளுடன் 1967 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இதேபோல் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் 4,425 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதில் 1.77 லட்சம் பேர் பயணித்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.