2 ஆடு, 2 மாடு மட்டுமே உள்ள அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு எதற்கு? பிரேமலதா கடும் தாக்கு!!

 
tn

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு, பெட்ரோல் , டீசல் ,எரிவாயு சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , "விருதுநகரில் நடந்த பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்.  ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பெட்ரோல் டீசல் ,சமையல் எரிவாயு ,மின் கட்டணம் ஆகிய அனைத்தும் அனைத்து விலையும் உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்கள் தற்போது மீண்டு வரும் நிலையில் விலைவாசி உயர்வு என்பது மக்களை மீண்டும் சிரமப்படுகிறது. 

annamalai

பெண்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் , நகை கடன் தள்ளுபடி, மாதம் ஒருமுறை மின் கட்டணம் என பல்வேறு பொய்யான வாக்குகளை அளித்து திமுக ஆட்சியைப் பிடித்து விட்டது.  திமுக ஆட்சிக்கு வந்து மக்கள் மீது சுமையை சுமத்துகின்றனர்.  சொத்து வரி உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள் . ஸ்டாலின் துபாய் லண்டன் சுற்றுப்பயணம் செல்கிறார் , குடும்பத்தை வளர்த்து மக்களை கைவிட்டு விடுகிறார்.  துபாய் விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பதும்,  எக்ஸ்போவில் சபரீசன் வரவேற்பதும் தான்  மக்களுக்கு சந்தேகத்தை வரவைக்கிறது" என்றார்.

premalatha

தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் வரிப்பணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  2ஆடு, 2 பெட்டி,  இரண்டு மாடு வைத்திருப்பவருக்கு  ஒய் பிரிவு பாதுகாப்பு எதற்கு? தைரியமிருந்தால் அந்த பாதுகாப்பு வேண்டாம்  என மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டியது தானே? திமுகவிற்கு திராணி இருந்தால் உண்மையைப் பேசி தெளிவுபடுத்த வேண்டும்.  சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் என அமைச்சர் கூறுவதற்கு பாஜக  அண்ணாமலை உரிய பதில் அளிக்க வேண்டும்" என்றார்.