அதிமுகவுடன் மோதல்... தவெகவுடன் தேமுதிக கூட்டணியா?- எல்.கே.சுதீஷ் பேட்டி
ராஜ்யசபா சீட் என அதிமுக கொடுத்த வாக்குறுதியால் தான் நான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என தேமுதிக பொளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள எல்.கே.சுதீஷ், “கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் என அதிமுக கூறியது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் கூறுவேன். ராஜ்யசபா சீட் என அதிமுக கொடுத்த வாக்குறுதியால் தான் நான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம். விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா என்பது பற்றி எல்லாம் கடலூர் தேமுதிக மாநாட்டில் அறிவிப்பு வெளியாகும். தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் என்பதை முன் வைத்தே பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார்.


