#DMDK விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல்- பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

 
premalatha premalatha

சென்னை : இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

அவரை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

premalatha

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மரியாதை நிமித்தமாக எங்கள் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

வருகின்ற 24ஆம் தேதி திருச்சியில் அதிமுக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அதில் அனைத்து கட்சி கூட்டணி தலைவர்களும் பங்கேற்க உள்ளோம். அந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சியின் 40 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்படுவார்கள்.

கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்று கூறினார்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்று வரும் சோதனை குறித்த கேள்விக்கு, தமிழகத்திற்கு ரெய்டுகள் ஒன்றும் புதிது அல்ல என்று பதிலளித்தார்.