வாக்கு எண்ணும் மையத்தில் திமுக - அதிமுகவினரிடையே மோதல்!

 
dmk admk

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 9 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் அந்தந்த அரசியல் கட்சியினர் குவிந்து இருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

dmk

இந்த நிலையில், கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேஜைகளில் அட்டவணை வரிசைப்படி பெட்டிகளை அமைக்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுகவினர் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை சமாதானம் செய்ய வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் பணி தாமதமானது.

இதே போல, பல வாக்கு எண்ணும் மையங்களில் அரசியல் கட்சியினரால் பரபரப்பு நிலவுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.  அமைதியாகவும் சுமுகமாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.