"விசிகவுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி" - திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் - முக்கிய அறிவிப்பு இதோ!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பொறுப்புகள் விவரத்தை திமுக தலைமையா கழகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் ,துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவருக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு என்று தெரிவிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றிற்கான பதவிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணி மேயர் பட்டியல் வெளியீடு;
*திமுக கூட்டணியில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்ததுடன், மாங்காடு நகராட்சித் தலைவர் பதவியையும் திமுக தலைமை ஒதுக்கியுள்ளது.
*காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கீடு

*சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவிகளும் ஒதுக்கீடு
*திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
*2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

*திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு
*திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்தது போல திருமுருகன்பூண்டி, கொல்லன்கோடு நகராட்சி தலைவர்கள் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


