“டெல்லியில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று விட்டோம்! அடுத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்”- அன்பில் மகேஷ்

 
ச்

மணப்பாறை அருகே மமக வேட்பாளரை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மமக வேட்பாளர் அப்துல் சமதை ஆதரித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டம் , மகளிர் உரிமை திட்டம், மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் ஆகியவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்காக டெல்லியில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று விட்டோம். அடுத்து தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் அதிலும் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற ரிசல்ட் கண்டிப்பாக வரப்போகின்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 12,500 ஓட்டுகளும், நாடாளுமன்றத் தேர்தலில் 25000 ஓட்டுகளும் வாங்கி பாஜக கூட்டணியை ஓட ஓட விரட்டினோம். 

முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி மைக்கை எடுத்தாலே எப்போதும் பொய்யை மட்டுமே கூறுகிறார் என்றார். அது எந்த அண்ணாமலை என்று தெரியுமா இந்த தேர்தலில் அதிமுக நான்காவது இடத்திற்கு செல்லும் என்று கூறிய அந்த அண்ணாமலை இப்போது இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணியாக மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கக்கூடிய ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. எம்.ஜி.ஆர்., அதற்கடுத்து கேப்டன் விஜயகாந்த் ஆகியோரைத்தான் சோறு போட்டு மகிழ்ந்தார்கள் என்று கூறுவர். தற்போது அந்த வழியில் தமிழக முதலமைச்சர் உள்ளார். வருகின்ற 23 ம்தேதி வாக்குச் சாவடிக்குச் சென்று முதல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமல்ல மே 4 ம்தேதி வாக்கு எண்ணும் போதும் அப்துல் சமது முதலிடத்தில் வெற்றி பெற்றார் என்பதை பெற்றுத்தர வேண்டும். அப்துல் சமதை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் கூறினார். தொடர்ந்து கஞ்சநாயக்கன்பட்டி , பாலக்குறிச்சி, வளநாடு, சுக்காம்பட்டி, கருப்பூர், எளமணம், கருங்குளம் , மலையடிப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.