நாளை தொடங்குகிறது 'திமுக75_அறிவுத்திருவிழா’
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் ஒருங்கிணைக்கும் #திமுக75_அறிவுத்திருவிழா நாளை (08.11.25) தொடங்குகிறது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 9.30 மணியளவில் கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ இருநாள் கருத்தரங்கத்தையும், நவம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறும் அரசியல் நூல்களின் அணிவகுப்பான ‘முற்போக்கு புத்தகக்காட்சி-2025’யையும் தொடங்கிவைக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 80+ ஆளுமைகளின் பங்களிப்பில் 1,120 பக்க அளவில் காலத்தின் தொகுப்பாக வெளியாகவிருக்கிறது `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்களில் திமுகவின் ப்ன்முக பரிமாணங்களை விளக்கி 80க்கு மேற்பட்ட ஆளுமைகளின் பங்களிப்பில் கட்டுரை தொகுப்பாக உருவாகிறது. அறிவார்ந்த ஆளுமைகள் 'திமுக75அறிவுத்திருவிழா’-வில் சிறப்பான கருத்துரை ஆற்றவுள்ளனர். அரசியல் கருத்துக்கள் நிரம்பிய முற்போக்கு நூல்கள் `சென்னை புத்தகக்காட்சி’யில் இடம்பெறவுள்ளன. விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


