சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் - தி.மு.க வேட்பாளர் உறுதி
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஜெ.ஜான் எபினேசர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக சார்பில் மரிய வில்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் ஜான் எபினேசர், கொருக்குப்பேட்டை எழில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். விளையாட்டு வளாகங்கள், ரேஷன் கடைகள் கட்டியது உள்ளிட்ட சாதனைகளை எடுத்துரைத்தார்.மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு, ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கும் ‘இல்லத்தரசி’ திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கூறி களமாடி வருகிறார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜே.ஜே.எபினேசர் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் மக்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர்.


