“நாத்தம் புடிச்ச சேர்மன் பதவி, 2 கோடி ரூபாய் கொடுத்துதான் சீட்டு வாங்கினோம்”.. தங்கையின் ஆதங்க வீடியோ
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் திமுக 12, அதிமுக 1, எஸ்டிபிஐ 1, சுயே 7 என 21 கவுன்சிலர்கள் உள்ளனர். நகராட்சி தலைவராக பை. செ. செஹனாஸ் ஆபிதா (திமுக), துணைத் தலைவராக ஹமீது சுல்தான் ( திமுக) இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் 21 வார்டுகளுக்கும் தெரு விளக்குகள் பொருத்த ரூ.1.18 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு 3 சதவீத கமிஷன் நகராட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தொகையை கவுன்சிலர்கள் யாருக்கும் பங்கு பிரித்து தர முடியாது என, நகராட்சி தலைவரின் தங்கை ஹமீதா, நகராட்சி தலைவர் அவரது சகோதரர் இஸ்திகா ஹசன் (மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர்களிடம் நவ.18 ஆம் தேதி ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“நாத்தம் புடிச்ச Chairman பதவி”.. தங்கையின் ஆதங்க Viral வீடியோ!#NewsTamil24x7 | #chairman | #ramanathapuram | #viralvideo pic.twitter.com/LNhPI86ZBv
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) November 25, 2023
கடந்த 2022ல் நடந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் அதிகம் செலவழித்து பதவிக்கு வந்திருப்பதாகவும், இதனால் யாருக்கும் பிரித்துக் கொடுக்க முடியாது எனவும் பேசிய அவர் பின்னர் சமாதானம் அடைந்தார். திமுக சேர்மனின் தங்கை, ‘2 கோடி ரூபாய் கொடுத்துதான் சீட்டு வாங்கினோம். ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை பணம் கொடுத்து சேர்மன் ஆனோம்’ என பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.