திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இன்று பேச்சுவார்த்தை!!

 
tn

நாடாளுமன்ற தேர்தலில்  தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி இடம்பெற்றுள்ளது.   இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு இன்று  பேச்சுவார்த்தை நடத்துகிறது.   

arivalayam

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, இன்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆலோசனை  நடத்துகிறது. நான்கு விருப்பத் தொகுதிகளை குறிப்பிட்டு இரண்டு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்க திட்டமிட்டுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை தர திமுக திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

mutharasan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.