திமுக - காங்கிரஸ் இடையே இன்று இரவு 7 மணிக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
Feb 22, 2026, 16:17 IST1771757223611
இன்று மாலை சென்னை வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளார்,

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் அமைத்த குழுவுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பின்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம். இரு தலைவர்களும் தேர்தல் கூட்டணி மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இம்முறை காங்கிரஸ் 41 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது.30 தொகுதிகள் இறுதி செய்யப்படலாம் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

