மார்ச் 8ம் தேதி திருச்சியில் திமுக மாநாடு
Updated: Jan 20, 2026, 19:51 IST1768918867856
‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ளது.

முதல்வர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் கழத்தின் வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 இலட்சம் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ மாபெரும் கழக மாநில மாநாட்டை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநில மாநாட்டில் 10 லட்சம் திமுகவினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


