திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்த முடிவு
May 30, 2025, 12:54 IST1748589845995
திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் தற்போது அமைச்சர் ஐ. பெரியசாமி, கனிமொழி எம்.பி, திருச்சி சிவா எம்.பி, ஆ.ராசா எம்.பி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோ துணைப் பொதுச் செயலாளராக உள்ளனர். இந்த நிலையில் , திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடவை இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடக்கவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


