அனல் பறக்கும் நகர்ப்புற தேர்தல்; திமுக மா.செ. கூட்டம் எப்போது? - வெளியான அதிரடி அறிவிப்பு!

 
ஸ்டாலின்

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான இடங்களை ஆளுங்கட்சியான திமுக தான் கைப்பற்றியது. அதிமுக பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்தது. இச்சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் தேதியே அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் கடந்த 1 மாத காலமாக அனைத்துக் கட்சிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றன. 

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்- Dinamani

சமீப நாட்களுக்கு முன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனால் இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்; ஊழல் புகார்கள் மீது ஆளுநர் உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும்: திமுக மாவட்டச் செயலாளர்கள் ...

அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில் ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறுகிறது.  இதில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.