வரும் 20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Jan 13, 2026, 21:04 IST1768318443500
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் "தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்' 20-01-2026 செவ்வாய்கிழமை மாலை 6.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடைபெறும். அதுபோது மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


