“விஜய் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா?”- துரைமுருகன்

 
காவிரி ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது- துரைமுருகன் காவிரி ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது- துரைமுருகன்

அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

துரைமுருகன்

காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்யும் என்று தெரிவித்தார். உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் மனிதாபிமானம் மாண்பு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதல்வர் என்று முதல்வரை கடுமையாக தாக்கி தவெக தலைவர் விஜய் பேசியுள்ளது எழுப்பிய கேள்விக்கு, கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல் ஆறுதல் சொல்லாமல் இருந்த அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர். நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா? எனக் கேள்வி எழுப்பினார்.

2026 தேர்தலில் நாட்கள் எண்ணப்பட்டுள்ளது திமுகவிற்கு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவர் பாவம் நல்ல மனிதர் அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டியனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அது அவர்கள் கட்சி விவகாரம். செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கிறவர். ஏன் இப்படி முடிவெடுத்தார் என்று எடப்பாடிக்கு தான் தெரியும். டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என்று அன்று கூறினார். அதன் பிறகு கட்சியை விட்டு நீக்கிய உடன் பாஜக தன்னை அழைத்து பேசினார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். உண்மை வெளிவந்து விட்டது” என்று தெரிவித்தார்.