#Breaking "அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை" - முதல்வர் ஸ்டாலின் பேட்டி!!

 
stalin

பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெங்களூரு விரைகிறார்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதா ஆட்சி காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்

stalin

வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை பாஜக தற்போது தமிழ்நாட்டில் பயன்படுத்தி வருகிறது எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை. அமலாக்கதுறை சோதனையைப்பார்த்து திமுக பயப்படாது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முடக்குவதற்காக இத்தகைய நடவடிக்கை. இதை நாங்கள் சமாளிப்போம். தேர்தல் பிரசாரத்தில் ஏற்கனவே ஆளுநர், இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது ஆகவே எங்களுக்கு வரும் தேர்தலில் வெற்றி சுலபம் என்றார். 
Ponmudi


முன்னதாக  அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சரும்,  திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு செம்மண் குவாரி தொடர்பாக சோதனை நடைபெறுகிறது. அத்துடன் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.