திமுகவினர் ஷாக்..! சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை..!!
234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. சிறிது இடைவேளை அடுத்து தவெக முன்னிலையில் பெற்றது. அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருந்து வருகிறது.
73 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, தவெக 102 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும், திமுக 53 இடங்களிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, திமுக, நாதக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
திமுகவின் கோட்டையாக இருந்த வந்த தலைநகர் சென்னையை இந்த சட்டசபை தேர்தலில் தவெக தன்வசப்படுத்தி உள்ளது.

