நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை சித்தாந்த போட்டியாகவே திமுக அணுகுகிறது- கனிமொழி

 
கனிமொழி கனிமொழி

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்தவராவார்.

kanimozhi

இந்நிலையில் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் குறித்து கருத்து கூறியுள்ள கனிமொழி எம்பி, “ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் கூடினோம். எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அரசியலமைப்பை மதிக்கும் வேட்பாளர். அரசியலமைப்பை தாங்கிப்பிடிக்கும் தீர்ப்புகளை வழங்கியவர் சுதர்சன் ரெட்டி. தமிழரை வேட்பாளராக அறிவித்ததால் பாஜக தமிழகத்தின் மீது அக்கறை செலுத்துகின்றனர் என்று பொருள் இல்லை. பாஜக முன்னிறுத்தும் பிளவுவாத அரசியலை எதிர்க்கக்கூடிய தேர்தலாக இது இருக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளோம். தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் பாஜக, வேட்பாளராக தமிழரை அறிவித்தால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ்மொழியின் மீதும் அக்கறை உள்ளதென அர்த்தமாகிவிடாது.

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை சித்தாந்த போட்டியாகவே திமுக அணுகுகிறது. இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள ஒரு வேட்பாளரை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரை முன்மொழிந்திருக்கிறோம்” என்றார்.