தூத்துக்குடி மாணவி கொலை குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை - கனிமொழி
அதிமுக பாஜகவின் B டீமாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணம் பாஜக தலைமையில் தான் கூட்டணியே இயங்கிக் கொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக மத்திய அரசு மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், GAS எரிபொருள் தட்டுப்பாடுகளை சரி செய்ய வேண்டும் அதற்கு தேவையானதை ஏற்பாடு செய்ய வேண்டும். திமுக கூட்டணியை பொறுத்தவரை பெரும்பாலும் எல்லாக் கூட்டணிகளும் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஒன்று இரண்டு பேரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அதுவும் விரைவில் முடிவடைந்து விடும்.
அதிமுக போயஸ் கார்டனில் காத்துக் கிடந்தது போக டெல்லியில் காத்துக் கிடக்கிற நிலை இருக்கிறது. நாங்கள் திமுகவில் இருந்து அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். கிட்டதட்ட பாஜகவின் B டீமாக மாறி இருக்கிறது, பாஜகவின் தலைமையில் தான் இன்று கூட்டணியே இயங்கி கொண்டு இருக்கிறது. அதிமுக என பெயர் இருந்தாலும் பிஜேபியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. வேடநத்தம் பள்ளி மாணவி உயிரிழப்பு சம்பந்தமாக குற்றவாளி கைது செய்த பின்பு இன்று பெற்றோரை பார்த்து குற்றவாளிக்கு விரைவில் உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவதற்கு எல்லாம் முயற்சிகளையும் எடுப்போம்” என்றார்.

