திமுக முன்னிலை - இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Jul 13, 2024, 12:36 IST1720854406491
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியுள்ள தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகம் காணும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


