சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவி பதவி பறிபோனது..!!

 
சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவி பதவி பறிபோனது..!! சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவி பதவி பறிபோனது..!!

சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற கூட்டத் தலைவியாக இருந்த உமா மகேஸ்வரி சரவணன் பதவி இழந்தார்.  நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்த 29 பேரில், 28 பேர் அவருக்கு எதிராக வாக்களித்ததால் பதவி பறிபோனது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் மன்றத் தலைவியாக இருந்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த  உமா மகேஸ்வரி.  இவர்  மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்ய முன்வரவில்லை என்றும், தெருவிளக்கு அமைப்பது, சாலை அமைப்பது போன்ற எவற்றிலும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் அவர் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.  

Sankarankovil

இதனால்  அதிருப்தியில் இருந்த கவுன்சிலர்கள் ஒன்றுகூடி , கடந்த கூட்டத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.   இந்த மனு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள  30 கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக, அதாவது  உமாமகேஸ்வரிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால்  உமா மகேஸ்வரியின் நகர்மன்ற தலைவர்  பதவி பறிபோனது. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இவருக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.