அடியாட்களை வைத்து தவெகவினரை அடிக்க சொன்னேனா? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

 
சேகர்பாபு சேகர்பாபு

அன்புமணியால் தனது தந்தையை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை, இந்நிலையில் ஒரு கட்சி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார், ராமதாஸ் கதறிக் கொண்டு இருக்கிறார். ராமதாஸை பார்ப்பதற்கே பாவமாக உள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளது.

Image

சென்னை, அசோக் நகரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “அசோக் நகரில் 15 கோடி ரூபாய் செலவில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 25-ம் தேதிக்குள் முதல்வர் படைப்பகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இடைக்கால பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் அரண்டு போகும் அளவிற்கு அதிக அறிவிப்புகள் உள்ளது. உடைந்த கட்சியில் ஒரு பாகமாக இருக்கிற அன்புமணி பேசுவதற்கு பதில் சொன்னால் சரியாக இருக்காது. எடப்பாடி பழனிச்சாமி அரிச்சந்திரன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர். அவரிடம் உண்மையை தவிர வேற எதுவும் வராது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் இருந்து வெளியேறியுள்ள கு.ப கிருஷ்ணன், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களிடம் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமியின் வண்டவாளம் தண்டவாளத்திற்கு வரும்.

பாரிமுனையில் பொதுமக்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும்தான் நேற்று சண்டை நடந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தவெகவினர் சொன்னதையே பதிவு செய்யாமல் உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று பெறுபவர்கள் பொதுமக்கள். இப்பிரச்சினை பொதுமக்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல். எப்படி பனையூரில் பிரச்சனைகள் மோதல் தொடர்கிறதோ அதே போல தான் நேற்று மோதல் நடந்துள்ளது.

Advertisement

சென்னையில் திமுவின் இருவர்ணகொடி தான் பட்டொளி வீசி பறக்கும். கிழக்கு சூரியன் உதிக்கும் இடம் ஆகவே சூரியனை சின்னமாக கொண்டுள்ள உதயசூரியன் தான் சுடரொளி வீசி பறக்கும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை எப்போதும் எங்கள் முதல்வர் வசம். சென்னையில் உள்ள 22 தொகுதிகளிலும் முதலமைச்சரின் வெற்றிக்கொடி தான் பறக்கும். அன்புமணியால் தனது அப்பாவையே ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு கட்சி வேற வைத்துள்ளார். ராமதாஸ் பதறிக் கொண்டு இருக்கிறார். ராமதாஸை பார்ப்பதற்கே பாவமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினர் தாக்கியதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மகளிர்  உட்பட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வந்தவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களா, தாக்கப்பட்டவர்கள் யார் என்பதை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் சென்று விசாரியுங்கள். இது போன்ற செயல்களை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்கள் இயக்கத்திற்கு மெழுகேற்ற துடிக்கின்றனர். அதற்கு நாங்களும் சேர்ந்து விளம்பரம் கொடுக்க தயாராக இல்லை” எனத் தெரிவித்தார்.