திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

 
dmk mla son

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் வருகிற 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஆந்திராவில் வைத்து  ருவரையும் தனிப்படை கைது செய்தது. இதனை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார். 

இந்த நிலையில், வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் இருவரின் நீதிமன்றக் காவலை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

News Hub