“வீடு இருந்தால் எப்படி உதவித்தொகை கொடுக்க முடியும்” ஏளனமாக பேசும் திமுக எம்.எல்.ஏ
சங்கரன்கோவிலில் மனு கொடுக்க வந்த முதியவரிடம் ஏரளனமாக பேசும் திமுக எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏவுமான ஈ.ராஜா, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வேண்டி மனு கொடுக்க வந்த சங்கரன்கோவில் முதியவரிடம், தானும் உங்கள் நிலைமையில்தான் இருப்பதாக காரில் வந்து இறங்கியபடி ஏளனமாக பேசியதோடு, இத்தனை வருஷம் எங்க போனீங்க? என்று கேட்டதற்கு மனு பலமுறை கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை என்று முதியவர் பதில் கூறிகிறார்.
💢 சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை பேச்சு...
— ShivaAnand -Say No To Drugs & DMK (@ShivaAnandAdmk) June 15, 2024
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வேண்டி மனு கொடுக்க வந்த சங்கரன்கோவில் முதியவரிடம், தானும் உங்கள் நிலைமையில்தான் இருப்பதாக காரில் வந்து இறங்கியபடி ஏளனமாக பேசியதோடு, (1/4)#ADMK_TVL@satyenaiadmk pic.twitter.com/nBz0BHTr2O
படுக்க மட்டும் வீடு இருப்பதாக பாவமாக சொல்லும் முதியவரிடம், வீடு இருந்தால் எப்படி உதவித்தொகை கொடுக்க முடியும் என்றும் நக்கலாக கூறுகிறார். மனுவைப் பார்த்து முதியவர் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர் என தெரிந்ததும், சமுதாயத்தைக் குறிப்பிட்டு உங்களுக்கெல்லாம் உழைக்கத்தான் இருக்கேன் முயற்சி பண்ணித் தாரேன் என்று அலட்சியமாக பேசுகிறார்.


