தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - வெளியுறவுத்துறை இணை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

 
tr balu

இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய இணை அமைச்சர் முரளிதரனை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 37 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் மாலத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

fishermen

இந்த நிலையில், இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய இணை அமைச்சர் முரளிதரனை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரனுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.  மாலத்தீவு  மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி நேரில் வலியுறுத்தினார். ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அவரிடம் ஒப்படைத்தனர்.