தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் திமுக எம்.பி. கனிமொழி

 
rain

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து  பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று(டிச.18) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

kanimozhi

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் கனமழை பாதிப்புகளை திமுக எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும், பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகளிலும் கனிமொழி எம்பி ஈடுபட்டு வருகிறார்.