"தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை " -கனிமொழி காட்டம்!!

 
ttn

தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் உணவு டெலிவரி செய்யும் சோமோட்டோ  நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவு ஒன்று வராமல் விடுபட்டு போயுள்ளது. இதுகுறித்து கஸ்டமர் கேரிடம் மெசேஜ் மூலம் கேட்டபோது இந்தியில் பேச அறிவுறுத்தியுள்ளனர். இந்தி தெரியாது என்று விகாஸ் தெரிவிக்க, இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை எப்படி கற்றுக்கொள்ளாமல் உள்ளீர்கள்? உங்கள் பணம் திரும்ப கிடைக்காது என்பது போல் பதில் கிடைத்துள்ளது.

“டேய் ஓ ….தா, ஏன்டா லேட்டா வந்த “-அசிங்கமாக திட்டி ,இடுப்பை ஒடித்து படுத்தப்படுக்கையான zomato ஊழியர் ..

இதை விகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , ஸ்க்ரீன்ஷாட்டுடன் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சோமோட்டோ நிறுவனத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.அத்துடன் #Reject_Zomato என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ttn

இந்நிலையில் திமுக எம்.பி., கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.  வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 



முன்னதாக தர்மபுரி  திமுக எம்.பி.,  செந்தில்குமார்,  எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது? தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நுகர்வோர் ஏன் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்பி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.