நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி. - எம்எல்ஏ வாக்குவாதம்

 
ச் ச்

தேனி மாவட்ட திமுக எம்.பி தங்கத் தமிழ்செல்வனுக்கும், ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜனுக்கும் பொது மேடையில் மோதல் ஏற்பட்டது.

தேனி ஆண்டிப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேடையில் எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் - ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரவேற்பு பேனரில் எம்.எல்.ஏ. படம் மட்டும் இடம்பெற்றிருந்தால் தங்க தமிழ்ச்செல்வன் கோபமடைந்தார். நலத்திட்ட உதவி அட்டைகளை நான்தான் வழங்குவேன் எனக்கூறி மகாராஜன் பிடுங்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி MP தங்க தமிழ்ச்செல்வன் அதிகாரபோதையில் அராஜகத்தில் உச்சிக்கே செல்வதாக தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேசமயம் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பங்கேற்க வந்த பொதுமக்கள் அச்சத்தில் கலைந்து சென்றனர்.