ஜூலை 18ல் திமுக எம்.பிக்கள் கூட்டம்..

 
dmk dmk


திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த எம்.பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 21ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.  

நிதி நெருக்கடி பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்! திமுக எம்பிக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

 இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18.07.2025 வெள்லிக்கிழமை காலை 10.30 மணிக்கு , சென்னை, அண்ணா அறிவாலயம் ‘முறசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.  அப்போது கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.