திமுக முப்பெரும் விழா விருதுகள் - திமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 
arivalayam

திமுக முப்பெரும் விழா இந்த ஆண்டு விருதுநகரில் நடைபெறும் என்று  திமுக அறிவித்துள்ளது.

திமுக சார்பில் முப்பெரும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்டநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், செப்டம்பர் 16 திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும், செப்டம்பர் 17 மறைந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளையும் சேர்த்து முப்பெரும் விழா திமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு – யார் யாருக்கு தெரியுமா?

இந்த நாளில் முதல்வரும், திமுக தலைவருமான  மு.க. ஸ்டாலின் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், பொதுக் கூட்டத்தை நடத்துவதும் வழக்கம். அத்துடன் முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:-

tn

2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கட்கும், அண்ணா விருது திரு. கோவை இரா.மோகன் அவர்கட்கும், கலைஞர் விருது கழகப் பொருளாளர் திரு. டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கட்கும் பாவேந்தர் விருது புதுச்சேரி திரு. சி.பி.திருநாவுக்கரசு அவர்கட்கும் பேராசிரியர் விருது திரு. குன்னூர் சீனிவாசன் அவர்கட்கும் வழங்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.