தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக மக்களவையில் நோட்டீஸ்

 
rn ravi rn ravi

தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், பெண்களுக்கு நடந்த கொடூரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 5 நாட்களாக முடங்கியது. இந்த நிலையில், இன்று 6வது நாளாக கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இன்றும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.