கடன் பெற்று தருவதாக அழைத்து சென்று அதிமுகவில் இணைக்க முயற்சி

 
கடன் பெற்று தருவதாக அழைத்து சென்று அதிமுகவில் இணைக்க முயற்சி

கடன் பெற்று தருவதாக அழைத்து சென்று அதிமுகவில் இணைக்க முயற்சி செய்வதாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

Tamil Nadu: At poll campaign launch, EPS gets backing of home crowd but  will that be

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூரில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் திமுக கட்சியில் உள்ள முதியவர்களிடம் விவசாய கடன், மாடு வாங்குவதற்கு கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் ஆகியவற்றை பெற்று தருவதாக கூறி அழைத்துச் சென்று அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் அலுவலகத்தில் வைத்து சால்வை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தாங்கள் அதிமுகவில் இணைந்து விட்டீர்கள் எனக் கூறி அனுப்பி  வருகின்றனர்.

சித்தாமூர் ஒன்றியத்தில் திமுகவினர் அதிக அளவில் இருப்பதால் அதிமுகவினர் இதுபோல் நாடகங்களை நடத்தி வருகின்றதாக புகார் தெரிவிக்கின்றனர். அதிமுகவினர் எடுக்கும் புகைபடங்களை சமூக வலையலத்தில் பதிவு செய்வதாகவும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து வருவதாக கணக்கு காட்டி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

Edappadi Palanisamy to take oath as Tamil Nadu chief minister at 4pm | Mint

இதனால் ஆத்திரமடைந்த சித்தாமூர் பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத்தை நேரில் சந்தித்து அதிமுகவினர் செய்யும் வல நிலையை எடுத்து கூறினர்.  அதற்கு எஸ்பி உடனடியாக  சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அளித்தார்.