"சசிகலா ஜெயிலுக்கு போனதற்கும், எடப்பாடி முதல்வராக ஆனதற்கு பின்பும் மிகப் பெரிய சதி...”- ஆர்.எஸ்.பாரதி

 
rs rs

ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான், உங்களது தலைவியின் வீட்டை காப்பாற்ற முடியாத நீங்கள் , தமிழ்நாட்டுப் பெண்களை எப்படி காப்பாற்ற போகிறீர்கள்? என எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

rs bharathi

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது.. இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ஜெயலலிதா இருக்கும்போது அவருடைய வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் இருந்தபோதுதான், அவ்வாறு ஜெயலலிதா வீட்டையே பாதுகாக்க முடியாத அதிமுகவைச் சார்ந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவீர்கள்? சசிகலா ஜெயிலுக்கு போவதற்கும், எடப்பாடி முதல்வராக ஆவதற்கு பின்பும் மிகப் பெரிய சதி நடந்துள்ளதை உதயகுமார் மேடை போட்டு விளக்க வேண்டும்” என்றார்.