#Duraimurugan எங்கள் வேட்பாளரை கைது செய்ய திட்டம்.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன ஷாக் தகவல்!

 
duraimurugan duraimurugan

வேலூர்: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஓரே கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வரும் வேளையில் இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இச்சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

 இச்சோதனை குறித்து குடியாத்தத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "எங்கள் கட்சியின் வேட்பாளர் ஒருவரை கூட கைது செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்று எனக்கு தகவல் வந்துள்ளது." என்று கூறினார்.

 மேலும், தேர்தல் நேரத்தில் இதுபோல ஈடி , ஐடி சோதனைகள் எல்லாம் நடக்கும். இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுக என்றும் அஞ்சாது என்று பதிலளித்தார்.