“அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்தால் நாங்கள் ஏற்போம்”- டி.கே.எஸ்.இளங்கோவன்

 
s

ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லும் ஆளுநரின் முடிவு சரி தான். அதிமுகவுடன் கூட்டணி என்று எங்கள் தலைவர் அறிவித்தால் நாங்கள் அப்படியே ஏற்றுக் கொள்வோம் என திமுகவின் செய்தி தொடர்பாளர்  இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் செய்தி தொடர்பாளர்  இளங்கோவன், “28 இடங்களை பெற்றுக் கொண்டு ஐந்து இடங்களில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அப்படி என்றால் 23 இடங்களில் அவர்களை தோற்கடித்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தினர் ஆனால் அதே கட்சியினருடன் பதவிக்காக காங்கிரஸ் போய் கூட்டணி சேர்ந்து இருக்கிறது இது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லும் ஆளுநரின் முடிவு சரி தான். மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டியது தவெகவின் பொறுப்பு. விசிக, கம்யூ. கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தற்போதைய அரசியல் சூழல் சிக்கலான நிலைதான். அதிமுகவும் திமுகவும் இணைந்து அரசியல் செய்வது சரியானதல்ல. 


அதிமுகவுடன் கூட்டணி என்று எங்கள் தலைவர் அறிவித்தால் நாங்கள் அப்படியே ஏற்றுக் கொள்வோம். அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து திமுக இதுவரை முடிவு எடுக்கவில்லை. இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகவில்லை. தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மையான நோக்கம்” என்றார்.