திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்.

 
TR Balu's Wife Renukha Devi TR Balu's Wife Renukha Devi


 திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி  உடல்நலக் குறைவால் காலமானார். 

திமுக பொருளாளரும் , மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.  நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை ரேணுகாதேவி , சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.