"காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு போகாது"- உதயநிதி ஸ்டாலின்

 
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்திலிருந்து இன்று தொடங்கியுள்ளேன்- உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்திலிருந்து இன்று தொடங்கியுள்ளேன்- உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மட்டும் வழிகாட்டியாக இல்லை பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்று இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி தியாகராய அரங்கில் சீதை பதிப்பகம் மற்றும் தமிழ் கேள்வி வழங்கும் செந்தில் வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீதி கட்சி தொடங்கப்பட்ட நாளில் இந்த விழா நடைபெறுவது கூடுதல் சிறப்பு.நிகழ்ச்சி அழைப்பிதழில் என்னுடைய பெயரும், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயரும், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பெயரும் போடப்பட்டிருந்தது. ஆனால் இங்கு நான் நிகழ்ச்சிக்கு உள்ளே வரும் போது செல்வ பெருந்தகை இல்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வந்து அவசர அழைப்பு காரணமாக மீண்டும் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். நிகழ்ச்சி தொடங்கி அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். கடைசி வரை இவர் வரமாட்டார் போலிருக்கு. இவர் வருவாரா மாட்டாரா, (நிகழ்ச்சிக்கு) பத்திரிகை நண்பர்களெல்லாம் தலைப்புகள் எல்லாம் தயாரித்து உதயநிதி அப்செட்டு, செல்வப் பெருந்தகை ஆப்சென்ட என தலைப்பு தயாரித்து வைத்திருந்தனர். கடைசியில் அவரும் வந்து அதற்கும் வழி இல்லாமல் காங்கிரஸ் கட்சி சரியான நேரத்தில் எங்கே வர வேண்டுமோ போனால் தானே வர முடியும். திமுக எனும் இரும்புக்கோட்டை கூட்டணியில் ஒரு சிறு விரிசல் ஏற்பட்டு விடாதா என்று சங்கிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு போகாது, பாஜகவை எதிர்கொள்ள இந்தியாவிற்கே முதல்வர் தான் முன்னோடி,

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மட்டும் வழிகாட்டியாக இல்லை, பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்று இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார். திராவிட மாடல் திட்டங்கள் இந்தியாவிற்கு முன்மாதிரியாக உள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமான ஒரு அமைப்பாக இருந்தது. இன்று அது பாஜக கைப்பாவையாக  உள்ளது.பே ராபத்தில் நாடே சிக்கி தவித்து கொண்டுள்ளது. குறிப்பாக சிறுபான்மை, பெண்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை நீக்க முயற்சி செய்து வருகின்றனர். எதிர்க்கட்சி அதிமுக இதனை ஆதரிக்கிறது. பாஜகவுக்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் அடிமைகள் இருக்கலாம், ஆனால் நம்ம ஊரில் இருப்பது போல் அதிமுக போல் கடைந்து எடுத்த அடிமைகள் அவர்களுக்கு எந்த மாநிலத்திலும் சிக்க மாட்டார்கள். பாஜகவின் நம்பர் 1 அடிமைகள் நாங்கள் தான் என்று நிரூபிக்க வழக்கு தொடர்ந்துள்ளார்கள். ஒரு புறம் தமிழ் மீது அக்கறை உள்ளது என்று கூறும் பிரதமர் இன்னொரு புறம் தமிழ் படிக்க கூடாது என்பதற்காக இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டுள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்று கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு 2500 கோடி ரூபாய் என்று சொல்வது எந்த வகையில் நியாயம். தமிழ் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் மோடி?

கடந்த 10 ஆண்டுகளில் 150 கோடி தமிழ் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. ஆனால் 2400 கோடி ரூபாய் சமஸ்கிருத மொழிக்கு வழங்கி உள்ளனர். இது தான் மோடியின் தமிழ் பாச நாடகம். இந்த அநியாயத்தை நாம் தட்டிக் கேட்க மற்றும் தடுத்தாக வேண்டும். இதற்கு நம் கையில் கிடைத்திடக் கூடிய வாய்ப்பு தான் 2026 சட்டமன்ற தேர்தல். தேர்தலுக்கு இன்னும் முழுதாக நான்கு மாதங்கள் கூட இல்லை. இந்த ஜனநாயகப் போரில் நம்முடைய கொள்கைப்படி நிச்சயமாக வென்று காட்டும். தமிழகத்தில் குறைந்தது 200 சட்டமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பார்” என்றார்.