"மினிமம் பேலன்ஸ் புடிச்சிருவாங்கனு காலை 9 மணிக்குலாம் மக்கள் Bankக்கு போய் பணத்தை எடுத்துட்டாங்க"- உதயநிதி
நேரடியாக தமிழ்நாட்டுக்குள் விடமாட்டோம் என தெரிந்து அதிமுக மூலம் பாஜக நுழைய பார்ப்பதாக துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், “நேரடியாக தமிழ்நாட்டுக்குள் விடமாட்டோம் என தெரிந்து அதிமுக மூலம் பாஜக நுழைய பார்க்கிறது. இது சாதாரண தேர்தல் அல்ல, டெல்லி அணி வெல்கிறதா? தமிழ்நாடு அணி வெல்கிறதா என நிரூபித்து காட்ட வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தொகுதி மறுவரையறை தொடர்பாக இந்தியாவிலேயே முதலில் பேச தொடங்கியது நம் முதல்வர்தான். மகளிர் உரிமை திட்டத்தை நிறுத்த பாஜகவும் அதிமுக முயற்சி செய்தது. நீங்க ரூ.1000-ஐ நிறுத்த முயற்சி பண்றீங்களா நான் ரூ.5000 கொடுப்பேன் என கொடுத்தார், நம்முடைய முதல்வர். 6 மணிக்கே பேங்க்ல பணம் போட்டாச்சு. மினிமம் பேலன்ஸ் இல்லைனு பணத்தை பிடிச்சுருவாங்களோ என்ற பயத்தில் காலை 9 மணிக்குலாம் மக்கள் Bankக்கு போய் பணத்தை எடுத்துட்டாங்க. கன்னியாகுமரிக்கு வரும் பிரதமரிடம் தமிழ்நாடுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள் என மக்களாகிய நீங்கள் கேட்க வேண்டும். சசிகலா காலில் விழுந்தது தவறு கிடையாது. சசிகலாவின் காலை வாரிவிட்டதை தான் தவறு என்கிறோம்” என்றார்.



