தேமுதிக வருகை திமுக கூட்டணிக்கு பலம்- உதயநிதி ஸ்டாலின்

 
s

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது கூட்டணிக்கு நிச்சயமாக பலத்தை சேர்க்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி பலமாகும்போது எதிரணியான பாஜக கூட்டணி இயல்பாகவே பலவீனம் அடையத்தான் செய்யும். 50 நாட்கள் பொறுத்திருங்கள் திமுக கூட்டணியின் பலத்தை வரும் தேர்தலில் மக்கள் காட்டுவார்கள்" எனக் கூறினார்.