“மீண்டும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக வந்தால் நான் போடும் முதல் கையெழுத்து”- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி

தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் விதமாக ’Champions of tamilnadu’ விழா சென்னை  ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியிலல் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தூத்துக்குடி மாவட்டத்தில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 41 விடுதிகளில் 2,500 பேர் தங்கியுள்ளனர். அனைத்து விடுதிகளுக்கும் டிவி, குளிர்சாதன பெட்டி, ஸ்மார்ட் வாட்ச், சலவை இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சியமைத்து, எனக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டால் நான் போடும் முதல் கையெழுத்து SDAT மாணவர்கள் விடுதிகளில் ஏசி வசதி செய்துதருவதாகதான் இருக்கும். 

கோவையை சேர்ந்த வீராங்கனைகளுக்கு சைக்கிள் தேவைப்பட்டது. அது மிகவும் விலையுயர்ந்த சைக்கிள். அதை வரவழைக்க ஒரு மாதம் ஆகும் என்று கூறினார்கள். அப்போதுதான் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ போன்றே ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்’ ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினோம். உடனே ரூ.5 லட்சம் கொடுத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1,000 பேருக்கு ரூ.30 கோடி வழங்கியுள்ளோம். இதுவரை 500 பேர் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர்” என்றார்.
 

Advertisement